பக்தரைக் காக்கும் பகலவன் மகனே - சனி பகவான் கவசம் | SANI BHAGAVAN KAVASAM - SUCHITRA | VIJAY MUSICALS

பக்தரைக் காக்கும் பகலவன் மகனே - சனி பகவான் கவசம் | SANI BHAGAVAN KAVASAM - SUCHITRA | VIJAY MUSICALS

Vijay Musical

6 лет назад

557,825 Просмотров

Baktharai Kakkum Pagalavan Magane || Nalam Tharum Nallaatreeswarar || Saneeswarar Kavasam || Vijay Musicals || Singer : Suchithra Balasubramaniam || Video : Kathiravan Krishnan || Music : Pradeep || Lyrics : Senkathirvanan || Lord Saneeswarar || Thirunallar || சனீஸ்வரர் கவசம் ||சனி பகவான் || SANI BHAGAVAN
Lyrics :

பக்தரைக் காக்கும் பகலவன் மகனே
நித்தமும் உன்னை நான் துதிப்பேனே
காகம் ஏறும் கரியவன் நீயே
சோகம் நீக்கி அருளிடுவாயே
மையென்னும் நிறத்தை உடையவன் நீயே
தைரியம் நெஞ்சில் கொண்டவன் நீயே
சரசரவென்று சடுதியில் வருக
சங்கடம் தீர்க்க நீயே வருக
உன்னருள் பெறவே உலகோர் முனைய
எண்ணில்லாத நலமே விளைய
ஈசன் பட்டம் சூடிய உன்னை
என்றும் வணங்க நீயருள்வாயே
யோகம் பலதந்து காப்பவன் நீயே
பாவம் விலக உனைப்பணிவோமே
கருணை காட்ட காரி வருக
கைத்தொழுவோமே சனியே வருக
அசுபஹிரதம் என்றிருந்தாலும்
முயற்சியும் பக்தியும் ஒருங்கே கொண்டு
காசியில் நீயும் லிங்கம் அமைத்து
ஈசனை நோக்கி கடுந்தவம் புரிந்தாய்
அருந்தவம் அறிந்து சிவனும் தோன்றி
விரும்புவதென்ன என்றே கேட்க
மகிழ்வுடன் நீயும் ஈசனை பணிந்து
மனதினில் இருப்பதை எடுத்துரைத்தாயே
ஒன்பது கோளில் உயர்ந்தவன் நான் என
உலகம் உணர்ந்திட வேண்டும் என்றாய்
ஈஸ்வரன் என்ற பெயரும் தன்னுடன்
இணைந்திட வேண்டும் என்றுரைத்தாயே
பரமனும் உந்தன் கோரிக்கையேற்று
அருள்புரிந்தார் அகம்மகிழ்ந்தாரே
அதுமுதல் நீயும் சனீஸ்வரன் என்று
அகிலம் அழைக்க உயர்வடைந்தாயே
வாழ்வில் உன்னை வணங்குவதாலே
வரும் இடர் குறைந்து வளம்பெறுவோமே
ஏழ்மை விலக ஏற்றம் தொடர
என்றும் எமக்கு நீயருள்வாயே
தீராத நோயும் தீமை பலவும்
காரி உன் அருளால் கரைந்து போகும்
அல்லலை அகற்றும் அற்புதன் நீயே
அதனால் உன்னை வணங்கிடுவோமே
துர்கையை வணங்கும் தூயவன் நீயே
எமதர்மராஜனின் சோதரன் நீயே
எள்ளு தீபம் ஏற்றியே உந்தன்
இணையடி வணங்கி நலம்பெறுவோமே
கருநிற ஆடை அணிந்தவன் நீயே
கருநீல மலரை சூடிடுவாயே
இரும்பு உலோக அதிபதி நீயே
எங்களை காக்க உளம்கனிவாயே
மகரம் கும்பம் ஆட்சி வீடு
ரிஷபம் மிதுனம் நடு வீடு
கடகம் சிம்மம் பகையல் கொண்டு
கைத்தொழுதோரை காப்பவன் நீயே
குருவின் சிறிதாய் தோன்றிய போதும்
உதவியில் பெரிதாய் உயர்த்திடுவோனே
திருநள்ளாறில் தலமுடையோனே
திருவடிபணிந்தேன் காத்திடு நீயே
சன்னதி தனியே கொண்டவன் நீயே
சங்கடம் தீர்க்கும் மன்னவன் நீயே
வாராய் வாராய் வரம் தர வாராய்
தாராய் தாராய் நலமே தாராய்
நிடதநாட்டு நளமகாராஜன்
இடர் பல அடைந்து தோஷம் நீக்க
உன்னிடம் வந்து உனைத்தொழுதானே
இன்னலை விடுத்து நிலை உயர்ந்தானே
கோதாவரிநாட்டரசன் தூய
கண்டவர்மன் என்பவன் தனக்கு
புத்திர பாக்யம் இல்லாததனால்
புத்திரதாமேஷ்ட்டி யாகம் செய்தான்
வேள்வியின் நடுவே அந்தணர்க்கிடையே
பூசல் மூண்டு பசுவொன்றை கொன்று
கோகத்தை பற்றிட துயரடைந்தாரே
சாபம் நீங்கிட அவரழைந்தாரே
அவ்வழி வந்த புரோமசர்மன்
என்ற அந்தணன் அவர்களை கண்டு
பாவ விமோச்சனம் அடைவதற்காக
உபாயமொன்று அவனுரைத்தானே
திருநள்ளாறு நீவீர் செல்க
புண்ணியதீர்த்தம் தனில்நீராடி
தர்பாரன் ஈஸ்வரரை பணிக என்றிட
அந்தணர் பலரும் விரைந்தார் அங்கே
உன்னிடம் வந்து குறைகளைச் சொன்னால்
உதவிடும் நல்ல உயர்குணத்தோனே
பண்ணிய பாவம் பணியென மாற
தந்திடுவாயே நீ உன் அருளே
தோஷம் கண்ட பலரும் உந்தன்
ஆலயம் வந்து நிவர்த்தி கண்டார்
க்ஷேமம் தந்து சிறப்புகள் தந்து
ஜகமதில் நீயே வாழ வைப்பாயே
அவந்தி மன்னன் குருசீராஜன்
ஒருமுறை மனதில் மையம் கொண்டான்
தானத்தில் உயர்ந்த தானம் எதுவென
பரத்வாஜ முனிவரை பணிவுடன் கேட்டான்
தானம் யாவிலும் உயர்ந்தது என்றும்
அன்ன தானம் என்றவர் சொன்னார்
காலம் அறிந்து அதனை செய்வது
சாலச்சிறந்தது என்றுரைத்தாரே
திருநள்ளாறு திருத்தலம் சென்று
அங்கே செய்யும் அன்ன தானமே
உலகில் பெரிதும் சிறந்தது என்று
மாமுனி சொல்ல மன்னன் மகிழ்ந்தான்
ரிஷியின் வாக்கை சிரமேல்கொண்டு
உன் தலம் வந்து அறமே புரிந்தான்
அதனால் அரசன் ஆயிரமாயிரம்
நன்மை அடைந்து நலமுற்றானே
வாழ்க வாழ்க சனைச்சரன் வாழ்க
வாட்டம் போக்கும் காரி வாழ்க
சூழும் இடரை கலைவோன் வாழ்க
சூத்திரதாரி நீயே வாழ்க
உன்பதம் பணியும் அடியார் வாழ்க
உன்னருள் வேண்டும் அன்பர்கள் வாழ்க
துன்பம் தீர்க்கும் தூயோன் வாழ்க
துணிவை அதிகம் கொண்டோன் வாழ்க
திருச்செங்கோடில் அருள்வோன் வாழ்க
திருவையாறில் இருப்பான் வாழ்க
ஓமாம்புலியூர் சனியே வாழ்க
உன்புகழ் சொல்லும் உத்தமர் வாழ்க
கணிந்தருள் செய்யும் கிதியோன் வாழ்க
கைத்தொழுதோரை காப்போன் வாழ்க
கடும்பிணி நீக்கி அருள்வோன் வாழ்க
மேற்கு திசையை உடையவன் நீயே
மேன்மைகள் வாழ்வில் தருபவன் நீயே
தங்கக்கவசம் ஒன்பது கொண்டு
தாழ்பணிந்தோரை காப்பது நன்று
கேட்கும் வரங்களை தருபவன் நீயே
கேடுகள் கலைந்து காப்பதும் நீயே
உன்னைப்போல் கொடுப்பாரில்லை
உனக்கொரு ஈடு எங்கும் இல்லை
தவறுகள் செய்தால் தண்டிப்பவனே
தருணம் பார்த்து நலம் புரிபவனே
அவதிகள் விலக அருள்பவன் நீயே
அனைவரும் வாழ வரம்கொடு நீயே
கெடுபலன் குறைத்து நற்பலன் தருக
நடுநிலையோடு நீதி தருக
கொடுமைகள் அழிய காற்றாய் வருக
குவலயம் செழிக்க நீயருள் புரிக
இந்திரன் முதலாய் அனைவரும் உந்தன்
பார்வையில் படவே நடுங்கிடுவாரே
அன்பரைக் காக்க அருள் தரம் தருக
வந்திடும் பேர்க்கு அபயம் தருக
நற்றுணையாக வருபவன் நீயே
நலமே நாளும் தருபவன் நீயே
பற்றிட வந்தேன் உன்திருப்பதமே
பரிவுடன் நீயும் பார்த்திடுவாயே
வேலனை வேங்கை மரமெனச் செய்தாய்
விறகினை சிவனாய் விற்கவும் செய்தாய்
பாலனை உரலுடன் கட்டிட வைத்தாய்
ஈசனை காலனால் உதைபட வைத்தாய்
யாவும் உந்தனின் திருவிளையாடல்
போதும் போதும் நீ தரும் ஆடல்
வாழ்வில் என்றும் வளமை தரவே
வணங்கிடுவேனே நின்திருவடியே
யாரும் உந்தன் பார்வையில் இருந்து
விலகுதல் அரிது என்பது நியதி
வேதம் இன்றி அவரவர் புரிய
வினையின் பலனை தருபவன் நீயே
தலைமுதல் கால்வரை உடலின் உறுப்பை
தடையற என்றும் நீயே காக்க
நரம்பும் சதையும் நலமுடன் விளங்க
நல்லருள் தந்து எத்தனை காக்க

Тэги:

#Baktharai_Kakkum_Pagalavan_Magane #Saneeswarar_Kavasam #Vijay_Musicals #Singer_:_Suchithra_Balasubramaniam #Tamil_Devotional #Video_:_Kathiravan_Krishnan #Music_:_Pradeep #Lyrics_:_Senkathirvanan #Lord_Saneeswarar #Thirunallar #Nalam_Tharum_Nallaatreeswarar #சனீஸ்வரர்_கவசம் #SANEESWARAR_KAVASAM #SANI_BHAGAVAN #சனி_பகவான்_கவசம்
Ссылки и html тэги не поддерживаются


Комментарии: